Malarum Ithayangal

Community


மலரும் இதயங்கள் - தமிழ் பேசும் பெண்களுக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக லண்டனில் நடந்து வருகிறது. ஜனவரி 2014 ஆண்டில் ஏற்பட்ட ஜெயவாணி வாகீஸ்வரனின் துயர சம்பவத்தை நாம் மறந்திருக்க முடியாது. தன் இரு குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட ஒரு துயரமான சம்பவம். எல்லா ஊடகங்களிலும் இந்தச் செய்தி வெளிவந்து நம்மை உலுக்கியது நிஜமே. ஜெயவாணி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் மனஅழுத்தம் என்று பேசப்படுகிறது. ஆங்கிலத்தில் தற்கொலையை “a cry for help” என்று கூறுவார்கள். ஜெயவானியைப் போல் வேறு எந்த தமிழ்ப் பெண்ணும் தற்கொலை என்னும் செயலுக்கு துணிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு பெண்களை ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி பெண்களின் தன்னம்பிக்கை, மனஉறுதி மற்றும் மக்கள் மத்தியில் பேசும் திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சம்பாஷணைகள், விவாதம், செயல்திறன் வளர்ப்பது போன்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இலவச உடல் பரிசோதனைகள், ஆரோக்கியத்தைக் காக்கும் வாழ்க்கை முறைகள் பற்றிய சுகாதாரச் செய்திகளும் உண்டு. பெண்களால் நடாத்தப்படும் மலரும் இதயங்களின் மூன்று ஆண்டுகள் நிறைவு காணும் இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.