பக்தி பாடல்கள்

Musician/Band

பக்தி பாடல்கள்

2:25
#தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா... மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் அழகன் எந்தன் குமரனென்று மன மொழி கூறும் உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது உயிரினங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா... உலகில் ஆடும் தொட்டில் எல்லாம் உன் பெயர் பாடும் உண்மை பேசும் மொழிகள் எல்லாம் உன் புகழ் பேசும் யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது யுகங்கள் எல்லாம் மாறி மாறி சந்திக்கும் போது உன் முகமலரின் அழகு மட்டும் முதுமை வராது கந்தா முதுமை வராது குமரா... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா...
2 days ago
4:19
#தெய்வம் இருப்பது எங்கே? அது இங்கே, வேறெங்கே? தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சம் நிறைந்த துண்டோ அங்கே!(தெய்வம்) பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம் பொய்யில் வளர்ந்த காடு! எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் இறைவன் திகழும் வீடு!(தெய்வம்) ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை! இசையில் கலையில் கவியில் மழலை மொழியில் இறைவன் உண்டு இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால் ஏற்கும் உனது தொண்டு!(தெய்வம்) நன்றி நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே நன்மை புரிந்தவர் எங்கே தெய்வம் அங்கே பழமை நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே பாசம் நிறைந்தவர் எங்கே தெய்வம் அங்கே(தெய்வம்) " படம். சரஸ்வதி சபதம் - வருடம் 1966
2 days ago
3:28
T M Soundararajan, P Susheela, Master Maharajan Music: K V Mahadevan Lyrics: Kannadasan Film: Thirumal Perumai (1968) Cast: Sivaji, KR Vijaya ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா பாரத தேவா பாண்டவர் நேசா பதமலர் பணிந்தோமே பாரத தேவா பாண்டவர் நேசா பதமலர் பணிந்தோமே உன் பதமலர் பணிந்தோமே ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா கண்ணா.... கண்ணா.... கண்ணா.... கண்ணா....
5 days ago
2:43
#ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை! (ஏழுமலை இருக்க) பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு! நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு! (ஏழுமலை இருக்க) கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது! கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது! மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது! மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது! (ஏழுமலை இருக்க) ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்! ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்! தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி! தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி! (ஏழுமலை இருக்க) படம்: திருமலை தென்குமரி குரல்: கே.பி.சுந்தராம்பாள் வரி: கண்ணதாசன் இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
5 days ago
2:58
#முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் வேலன் என்றால் வீரம் வரும் கந்தன் என்றால் கருணை தரும் வேலன் என்றால் வீரம் வரும் கந்தன் என்றால் கருணை தரும் ஷன்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும் ஷன்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும் ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும் ஸ்வாமி நாதனே சரவணனே ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும் ஸ்வாமி நாதனே சரவணனே ஆறு முகம் கொண்டு ஆறுதல் தந்து கோடி நலம் காட்டும் குருபரனே முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் பாரத தாய் மடியினிலே பண்புடனே தவழுகின்றேன் பாரத தாய் மடியினிலே பண்புடனே தவழுகின்றேன் பழமை எல்லாம் நினைவூட்டும் பைந்தமிழில் பாடுகின்றேன் பழமை எல்லாம் நினைவூட்டும் பைந்தமிழில் பாடுகின்றேன் கால வரலாறு போற்றி புகழ் பாடும் கவிதை யாவுமே தனி தமிழே கால வரலாறு போற்றி புகழ் பாடும் கவிதை யாவுமே தனி தமிழே நாளும் முறையோடு நன்மை பல தேடி வாழ வழி கூறும் திருக்குறளே முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகை கண்டேன் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்
5 days ago
4:35
#அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்! சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க...பார்க்க... சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ.... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன். அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்! ஆ ஆ.. பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே, கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்! பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை, வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்! ஆ ஆ.. மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ! மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ! அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன், அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்! ஆ ஆ.. படம்: பஞ்சவர்ணக்கிளி இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி வரிகள்: வாலி குரல்: பி.சுசீலா
5 days ago
3:01
#திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா? கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா? குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா? திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு ஆறுமுகம் இங்கு திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா திரைப்படம் : தெய்வம் பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்; டி.எம்.சௌந்தரராஜன் பாடல் வரிகள் : கண்ணதாசன் இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
6 days ago
4:19
# திரைப்படம் (1983) : சலங்கை ஒலி நடிகர் : கமல்ஹாசன் நடிகை : ஜெயபிரதா இசையப்பாளர் : இளையராஜா பாடகி : ஜானகி டைரக்சன் : கே. விஸ்வநாத் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா தங்க நிலாவினை அணிந்த வா ஆடுகிறேன் பூர்ணோ தயா அருளில்லையா..... பஞ்ச பூதங்களும் முக வடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க ஏழு அடிகளும் சுரங்கள் படிக்க சா காமா தா ஸி ன ஸா ரா க சாச சு மா கா ஸி ன ஸா ராக க சாச சாச கன் கா ஸி கம நீதா மக்கரி கஸா உன் பார்வையே எட்டு திசைகளே உன் சொற்களே நவரசங்களோ கங்கையின் மணவாளா உன் மௌனமே உபநிடங்கள் தரவில்லையா மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதூர் வேதங்களும் உந்தன் வழிகள் கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும் இறைவா உன்னடி தொழுதே துதிக்குமத் அத்வைதம் நீ ஆதி அந்தம் நீ நீ அங்கு இல்லை புவனம் முழுவதும் நீ கைலாச மலைவாசா தலையாவும் நீ புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ..
6 days ago
2:49
# திரைப்படம்: அகத்தியர் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் ஆண்டு: 1972 உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே சமயம் யாவும் தழைத்திடவே சத்தியம் என்றும் நிலைத்திடவே உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் அறிவும் அன்பும் கலந்திடவே அழவில் வையம் மலர்ந்திடவே நெறியில் மனிதன் வளர்ந்திடவே நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும் உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
6 days ago
3:53
# இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே … இறைவா… வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ..? (இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை) சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ..! மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ..! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை.. பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன..? (இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை) தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..! அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..! வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா… உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை… பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை படம்: திருவிளையாடல் பாடியவர்: T.R. மகாலிங்கம் கவிஞர்: கண்ணதாசன் இசை: K.V. மகாதேவன் ஆண்டு: 1965
6 days ago
3:50
#உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே! நிதி வேண்டும் ஏழைக்கு - மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்! (உலகங்கள் யாவும் உன்) மனம் உள்ளவர் குணம் உள்ளவர் - மனதுக்குச் சுகம் வேண்டும்! தனம் உள்ளவர் அதில் பாதியை - பிறருக்குத் தர வேண்டும்! ஆறெங்கும் நீர் விட்டு - ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே! உந்தன் வரம் வேண்டுமே! (உலகங்கள் யாவும் உன்) பாடு பட்டவன் பாட்டாளி - அவன் மாடிக்கு வர வேண்டும்! பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் - பாரதம் பெற வேண்டும்! நாடெங்கும் சேமங்கள் - வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! - முருகா அருள் வேண்டுமே! - திருவருள் வேண்டுமே! முருகனருள் வேண்டுமே! படம்: திருவருள் இசை: குன்னக்குடி வைத்தியநாதன் வரி: கண்ணதாசன்
6 days ago