Sirkali TV

City

புறாவை போல பல நாடுகளில் பிரிந்து வாழும் நம்ம சீர்காழி மக்களே ஒரே கூண்டில் வந்து அடையுங்கள்


சீர்காழிக்கு மொத்தம் பன்னிரண்டு பெயர்கள் புராணத்தில் குறிப்பிடப்படுகின்றன. பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனவும், தேவர்கள் தஞ்சம் அடைந்ததால் புகலி எனவும், அசுர குருவும் தேவ குருவும் பூஜித்ததால் வெங்குரு எனவும், பிரளய காலத்தில் உமா மகேஸ்வரர்கள் தொனியில் வந்ததால் தோணிபுரம் எனவும் தரையைப் பிளந்து இரணியாக்கனை வராகமூர்த்தி கொன்றதால் பூந்தராய் எனவும், தலை வடிவில் ராகு பூஜித்ததால் சிரபுரம் எனவும், புறாவால் சோதிக்கப் பட்ட சிபிச் சக்கரவர்த்தி வழிபட்டதால் புறவம் என்றும், சண்பைப் புல்லால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட பழி தீரக் கண்ணன் வணங்கியதால் சண்பை எனவும், காளிதேவி பூஜித்ததால் ஸ்ரீ காழி (சீர்காழி) எனவும்,பராசரர் பாவம் நீங்கப் பூஜை செய்ததால் கொச்சைவயம் என்றும், உரோம்ச முனிவர் தனது மலவாதனை நீங்க வழிபட்டதால் கழுமலம் என்றும் பல பெயர்களால் இத்தலம் வழங்கப்படுகிறது