கருப்பு ஆடு - Black Sheep

Publisher


அரசியல்வாதிகளின் சுயரூபத்தை தோலுரித்து காட்டும் கறுப்பு ஆடு!!

3:02
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, பெருந்துறை, மேட்டுப்பாளையம் டவுன்களில் காவல்துறை, சட்டம் எல்லாம் இரண்டாமிடம் தான். இதை ஆள்வது சாதியும், பணமும். இதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலைமை இன்னும் மோசம். சமூக வலைத்தளங்கள் எல்லாம் இங்கு சல்லிக்காசு பெறாது. அதிமுக, திமுக எல்லாம் ஒரே கட்சி தான். பெரும்பாலான குற்றங்கள் வெளியவே வராது, வந்தாலும் பஞ்சாயத்து, ஊர் மரியாதை , அபராதம், காசு வெட்டி போடுதல்,.அவ்வளவு தான். இதை தான் இவர்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். காடு, மேடு, தோட்டம், தொரவு, நூல்மில், ரைஸ் மில் , கல்யாண மண்டபம் என காலங்காலமாக வழி வந்த சொத்துக்களை காத்து வாழும் பரம்பரைகள் பூமி இது. அது தவறில்லை. பிள்ளைகளை பெயருக்கு படிக்க வைப்பார்கள். அனால் எவரிடத்திலும் கைகட்டி வேலை பார்க்க அனுப்ப மாட்டார்கள் . நமக்கிருக்கு சாமி ஏழு தலைமுறை சொத்து ..அத பாத்துகிட்டு நம்ம ஊர்லயே இரு கண்ணு என வெள்ளந்தியாக அம்மாக்கள் உருக, இந்த மாதிரியான BRAT மைனர் குஞ்சுகள் உருவெடுக்கிறார்கள். ஊர் பூரா நண்பர்கள், பண்ணை பங்களா, சொகுசு கார்கள், என எல்லாம் கிடைத்தாயிற்று. பிறகென்ன ஊர் மேய வேண்டியதுதான். போலீஸ் சாதாரணமாக சந்தேக கேசில் விசாரிக்கலாம் என நினைத்தால் கூட அப்பாக்கள் விட மாட்டார்கள்.. அதென்ன கண்ணு நம்ம தம்பிய நிறுத்தி விசாரிச்சியா .. நீ சண்முகம் பையன் தான .. அப்பா கிட்ட நான் பேசுகிறேன் என SI க்கே போன் போட்டு எகிறுவார்கள். கழுத்தில் இருக்கும் செயினை வாயில் கடித்தபடி மைனர் குஞ்சுகள் வெளியே வந்துவிடும். ஆம்பளைன்னா சிங்கம்டா என திரியும் இந்த முண்டங்களுக்கு பெண்ணை பற்றி எந்த மயிறு புரிதலும் இருக்காது. ஒரு சக உயிராக கூட பார்க்க தெரியாது. பொட்ட கழுத என ஒரே வார்த்தையில் அடக்கி விடுவார்கள். நகர் புற BRAT களும் இதே கதை தான் என்றாலும், கூட்டு வன்புணர்வை வெறும் செய்தியாக மட்டும் கடந்து கொண்டிருந்த சமூகத்தின் நெஞ்சில் சரேலென ஒரு கத்தியை செருகியிருக்கிறது பொள்ளாச்சி வீடியோ. பார்க்கும் பொழுது நமக்கு வலிக்கிறது, ஆற்றாமையில், இயலாமையில் செய்வதறியாமல் தவிக்கிறோம். எந்த குற்ற காணொளிக்கும் நான் இவ்வளவு கலங்கியதில்லை, மனது முழுவதும் வலி. “அண்ணே அண்ணே பெல்டால அடிக்காதீங்க..Pant ஐ கழட்டறேன்” என அந்த பெண் கதறி அழுது, கைகள் நடுங்கி, கெஞ்சி கேட்கும் போது கூட சிரித்துக்கொண்டே வீடியோவைத் தொடர்கிறார்கள் என்றால், ..எப்படி இவ்வளவு அரக்கத்தனம் சாத்தியம் ? “ நீ என்ன மொத பொண்ணா, எவனும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது” என்ற மிதப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும். இவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா, அம்மா அக்கா தங்கச்சி ..என கேள்வி எழலாம். அம்மா, அக்கா , தங்கச்சி ..பாட்டி என அதனை பேரும் பாராட்டி சீராட்டி வளர்த்த முண்டங்களே இது.. அவர்களுடன் தினமும் ஒரு செல்பியை எடுத்து கொண்டு, அக்கா பசங்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துக் கொண்டு, கடைக்குட்டி தங்கங்களாக வளைய வந்த இவன்கள், 200 க்கும் மேற்பட்ட பெண்களை சிதைத்து, அதை ஆயிரக்கணக்கில் வீடியோ எடுத்து பகிர்ந்திருக்கிறார்கள். மிரட்டியிருக்கிறார்கள். நகை, பணம் பறித்திருக்கிறார்கள். நியாயமாக பார்த்தால் அதே அம்மா, அக்கா , தங்கச்சி, பாட்டி எல்லாம் சேர்ந்து இவர்களுக்கு விஷம் வைத்து கொல்ல வேண்டும். நம்பிக்கையை சிதைத்தது மட்டுமின்றி, நம்பிய பெண்களையும் சிதைத்திருக்கிறார்கள். பலி கொடுப்பதே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான நியாயம் வழங்கும்.
12 days ago
0:30
unfit pm
1 month ago